கொழும்பு- ஜிந்துபிட்டியை சேர்ந்த 154 பேரை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கப்பலில் பணியாற்றிவிட்டு ஜிந்துபிட்டிக்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 29 குடும்பங்களை சேர்ந்த 154 பேரை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பியுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
14 நாள் தனிமைப்படுத்தலில் இருந்த 26 ம் திகதி வீடு திரும்பிய அந்த நபரிடம் மேற்கொண்ட சோதனையின் போது அவருக்கு நோய் பாதிப்பு உள்ளமை உறுதியாகியுள்ளது என விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அந்த நபர் தனது தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளின் போது அவருக்கு நோய் பாதிப்பி;ல்லை என தெரியவந்தது,எனினும் நேற்று மீண்டும் அவரை சோதனைசெய்ததுடன் ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என தெரிவித்துள்ள ருவான் விஜயமுனி அவரது குடும்பத்தை சேர்ந்த எட்டுபேரை சோதனைக்கு உட்படுத்தினோம் அவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.