2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதி போட்டியில் இடம்பெற்றதாக தான்னால் முன்வைக்கப்பட்ட நிர்ணய சதி குறித்த விசாரணையில் பொலிஸார் முற்றிலும் தவறு செய்துள்ளனர் என்று முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாந்த அளுத்கமகே குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் முறையான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்ட நிர்ணயச் சதிக் குற்றச்சாட்டு தொடர்பான விசேட பொலிஸ் விசாரணை குழுவின் விசாரணை போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இன்று நிறுத்தப்பட்டது.
இதனையடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனார்.