கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பான முத்தரப்பு உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு சீனா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தது என இந்தியா கருதுவதாக டெக்கான் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வது குறித்த உடன்படிக்கையை இலங்கை மீளாய்வு செய்யவுள்ள அதேவேளை 2019 இல் ஜப்பான் இந்தியா இலங்கை ஆகிய மூன்றுநாடுகளும் கைச்சாத்திட்ட இந்த உடன்படிக்கையை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி ராஜபக்சவை சீனா கேட்டுக்கொண்டுள்ளது என இந்தியா கருதுகின்றது என இந்திய செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஆழ்கடல் கொள்கலன் முனை அபிவிருத்தி தொடர்பாக 2019 இல் இலங்கை இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கைச்சாத்திட்ட உடன்படிக்கை குறித்து மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஐவர் கொண்ட குழுவை நியமித்துள்ளார் என டெக்கான் ஹெரால்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன்முயைத்தை அபிவிருத்தி செய்வதை வெளிநாட்டிற்கு வழங்குவதற்கு எதிராக துறைமுக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டதை தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி இந்த குழுவை நியமித்துள்ளார் என டெக்கான் ஹெரால்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜயா கொள்கலன் முனைக்கு என ,சீனாவிடமிருந்து இலங்கை துறைமுக அதிகார சபை இறக்குமதி செய்த கிரேன்களை கிழக்கு கொள்கலன் முனையத்தில் நிறுத்தவேண்டும் என தொழிலாளர்கள் விடுத்த வேண்டுகோளையும் கோத்தபாய ராஜபக்ச மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என இந்தியாவின் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயத்தில் கொழும்பில் உள்ள சீனா தூதரகத்திற்கு தொடர்புள்ளதாக புதுடில்லி சந்தேகப்படுகின்றது என டெக்கான் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் முத்தரப்பு உடன்படிக்கையை மீளாய்வு செய்யும் நிலையை ஏற்படுத்துவதற்காக கொழும்பு துறைமுக ஊழியர்களை சீன தூதரகம் தூண்டியது என புதுடில்லி சந்தேகிக்கின்றது எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் சீனாவிற்கு பெரும்பங்குள்ளதையும் டெக்கான் ஹெரால்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா ஜப்பானிற்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
2019 உடன்படிக்கையை இலங்கை பின்பற்றவேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது என தெரிவித்துள்ள புதுடில்லிவட்டராமொன்று இது குறித்த பேச்சுவார்த்தைகளை இந்தியா ஜப்பானுடன் இலங்கை ஆரம்பிக்கவேண்டும் எனவும் இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது என டெக்கான் ஹெரால்ட் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட உடன்படிக்கையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் பெருமளவு பங்குகள் இலங்கை துறைமுக அதிகார சபையிடம் காணப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள புதுடில்லி வட்டாரங்கள் கொழும்ர் சர்வதேச கொள்கலன முனையத்தின் பெருமளவு பங்குகள் சீனாவிடமுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையினதும் இந்தியாவினதும் பாதுகாப்பும் அபிவிருத்தியும் பிரிக்க முடியாதவை என புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.