web log free
December 25, 2024

மாலை 5 மணிவரை வாக்களிக்கலாம்

ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதென, தேர்தல் ஆணைக்குழு வெ ளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வழமையாக காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணியுடன் வாக்களிப்பு நேரம் நிறைவடையும் நிலையில், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்த நேரமானது 1 மணித்தியாலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வாக்களிப்பு நேரத்தை நீட்டிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளதென்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd