தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா எனும் வி.முரளிதரனுடன் அம்பாறை மாவட்ட முன்னாள் எம்பி குணசேகரம் சங்கர் ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளார்.
இந்நிகழ்வு, கல்முனையில் அமைந்துள்ள குறித்த கட்சியின் அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது.
கருணாவுடன் இணைந்தமை தொடர்பாக குணசேகரம் சங்கர் கருத்துத் தெரிவிக்கையில்,
“அம்பாறை மாவட்டத்தில் பிறந்தவன் என்ற அடிப்படையில் அம்மக்களின் பூர்வீகத்தை நன்கு அறிவேன். நானும் கடந்த காலங்களில் ஒரு போராளியாக இருந்தவன். எமது மக்கள் படும் இன்னல்களை அறிவேன். நான் எம்பியாக இருந்தகாலத்தில் என்ன செய்தேன் என்பதை எமது மக்கள் அறிவார்கள்.
இன்றைய சமகால சூழலில் அம்பாறை தமிழ் மக்களை மீட்கக்கூடிய ஒரே வல்லமை கருணா அம்மானுக்கு மட்டுமே உள்ளது. மேலும் தமிழ் மக்களின் அபிலாசகைளை வென்றெடுக்கக் கூடிய திராணியும் சக்தியும் அவரிடமே உள்ளது.
அதனால்தான் இன்னும் ஏமாற்று அரசியலில் நிற்காமல் யதார்த்த அரசியலில் இணைந்து மக்களுக்காக சேவையாற்ற கருணா இணைந்துள்ளேன்” – என்றார்.
இவர் ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.