web log free
June 26, 2026

60 பேருக்கு இலங்கையில் கொரோனா

கந்தக்காடு பிரசேதத்தில் அமைந்துள்ள போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையத்தில்  56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த வெலிகடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் ஊழியர்கள் 450 பேரிருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இன்று (09) காலை மாரவில பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd