web log free
July 01, 2025

3 நாள் விடுமுறை இல்லை

மூன்று நாள் விடுமுறை அறிவிக்கும் திட்டம் எதுவுமில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சமூகஊடகங்கள் சிலவற்றில் இது குறித்து வெளியான தகவல்கள் உண்மையானவையில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் மூன்றுநாள் விடுமுறை அறிவித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தின பணிப்பாளர் நாயகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி செய்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd