web log free
December 25, 2024

இந்தியாவிலிருந்து தப்பிவந்த 2 ​பேர் கைது

சட்டவிரோதமாகப் படகு மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த இருவர் உள்ளிட்ட நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்.தொண்டமானாறு வடக்குக் கடற்பகுதியில் வைத்​தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தமிழ்நாடு அகதிகள் முகாமொன்றிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக வந்த இருவரும், இவர்களுக்கு உதவிய இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இந்தியாவிலிருந்து வந்த மற்றொருவரும் புலிகள் அமைப்போடு தொடர்புடையவர் என சந்தேகிப்பதாகவும், இவர்கள் இருவரிடமும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படகையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd