web log free
December 25, 2024

பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு

கொவிட் 19 வைரஸ் பரவலின் தற்போதைய நிலைமையை நன்கு அவதானித்து வருவதாகவும் நாளை (13) முதல் 17​ஆம் திகதி சகல பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நிலைமை மோசமடைந்தாலும் சகல பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும் மீண்டும் விடுமுறை வழங்கி அனைவரதும் ஆரோக்கியத்தை பாதுகாக்க தயக்கமின்றி செயற்படுவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கல்வி கட்டமைப்பில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய கல்வி ஊழியர்களின் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் கல்வி அமைச்சு மிகுந்த கவனத்துடன் செயற்படுவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கல்வி அமைச்சர் டல்ஸ் அழகப்பெருமவின் அறிவுறுத்தலின் பேரில் மாகாண கல்விப் பணிப்பாளர்கள், சுகாதார மேம்பாட்டு அதிகாhரிகள் ஆகியோரை இணைத்து தகவல் மையம் ஒன்றை அமைத்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அதிகாரிகள் தங்கள் பணி இடம் மற்றும் குறித்த பிரதேசத்தின் கொவிட் 19 தொற்று நிலைமை பற்றிய தகவல்களை 1988 என்ற துரித தொலைப்பேசி இலக்கத்திற்கோ அல்லது 0112 785 818 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ அறிவிக்க முடியும்.

அதேபோல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புக் கொண்டு தகவல்களை பறிமாறிகொள்ள முடியும் என கல்வி அமைச்சு மேலும் கூறியுள்ளது.

Last modified on Sunday, 12 July 2020 15:20
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd