web log free
July 01, 2025

கொழும்பில் தொலைபேசி அலுவலகம் மூடப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் ஆபத்து காரணமாக கொழும்பில் உள்ள முன்னணி தொலைபேசி நிறுவனம் ஒன்றின் பிரதான அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிய நபருடன் பழகிய நபர் ஒருவர் அந்த அலுவலகத்திற்கு வந்துச் சென்றுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அலுவலகம் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து பணியாற்றுமாறு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

அதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கலவானை பிரதேசத்தில் வர்த்தக நிலையங்களை இன்று மதியம் முதல் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கலவானை நகர வர்த்தக சங்கத்தின் 300 உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு இணங்கி வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd