முச்சக்கரவண்டி சாரதிகள் ஒரு இலட்சம் பேருக்கு இந்த வருடத்தில் இலவசமாக தொழிற்பயிற்சி பெற்றுக்கொடுப்பதற்கு தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) தீர்மானித்துள்ளது.
இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு இவ்வாறு பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் அலைபேசி செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பயிற்சி நிலையங்களின் ஊடாக இந்த பயிற்சி வழங்கப்படும் என, தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் தலைவர் டொக்டர் சாரங்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.