web log free
April 12, 2026

ரிஷாட்டுக்கு 27 இல் CID அழைப்பாணை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 27ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு திணைக்களத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அந்த திணைக்களம் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அறிவித்தல் விடுத்துள்ளது.

வாக்குமூலத்தை வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தராத நிலையில் நேற்றைய தினம் மேற்படி திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 09 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு நீதவான் அழைப்பாணை விடுத்துள்ளார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd