கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலை சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, தப்பிச் சென்ற நபரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தப்பிச் சென்ற குறித்த நபர் தொடர்பில் பொலிஸார், பொதுமக்களின் உதவியினை கோரியுள்ளனர்.
சந்தேக நபரின் இடது கால் ஊனமுற்ற நிலையிலும், நடைபயிற்சி செய்யும் போது முடங்கிப்போயுள்ளதாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
போதை பொருளுக்கு அடிமையான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை அடையாளம் கண்டால் பின்வரும் 0718591017,0718592290,0718591864 தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது 119 தொடர்பினை மேற்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.