முல்லேரியாவ ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே அவரை கைது செய்துள்ளனர்.
திருகோணமலை வள்ளிமலர், சின்னத்தம்பி பிள்ளையைச் சேர்ந்த, எல்சியாம் நசீம் என்றழைக்கப்படும், மொஹமட் காசீம் மொஹமட் நசீம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதான இவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சையளிக்கப்பட்டு வந்தவர் ஆவார்.