ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைவரும் கழுதைகள் அல்லது குதிரைகள் அல்ல. எனினும், வேட்பாளர் தெரிவுக்குழுவின் கழுதை இருந்தது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் ஓஷாதி ஹேவம்துமா, எமது பெரமுனையில் இருக்கும் வேட்பாளர்கள் அனைவரும் கழுதைகள் அல்லது குதிரைகளா என என்னிடம் வினவினார். இல்லை, இல்லை அப்படி இல்லை. வேட்புமனுக்குழுவில் இருந்த ஏதோ ஒரு கழுதைதான் ஓஷாதி ஹேவம்துமா வேட்பு மனுவை கொடுத்துள்ளது என நான் கூறினேன் என்றார். காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஓஷாதி ஹேவம்துமா, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களை விமர்சனம் செய்திருந்தார்.