கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்துவதற்கு ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தொல்பொருள் விவகாரம் தொடர்பில் அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
கிழக்கு குழுவில், தமிழ், முஸ்லிம்கள் இல்லாத நிலையில், புதிய அறிவிப்பும் சிறுபான்மையினரின் தலையில் விழுந்த பேரிடியாகவே இருக்குமென கருத்துகள் பரப்பப்படுகின்றது.
இலங்கை தொல்பொருள் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்று ஜனாதிபதியால் நேற்று (24) நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.