குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ரிஷாட் பதியூதீன் ஆகிய இருவரும் வாக்குமூலமளிப்பதற்கு சென்றுள்ளனர்.
கொழும்பு தலைமையகத்துக்கு ரவி கருணாநாயக்கவும், வவுனியா, ஈரப்பெரியகுளத்திலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காரியாலயத்துக்கு ரிஷாத் பதியூதீனும் சென்றுள்ளனர்.
நீதிமன்றக் கட்டளையை கடந்த வௌ்ளிக்கிழமை திருத்தம் செய்த கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சென்று, வாக்குமூலமளிக்குமாறு கட்டளையிட்டிருந்தது.