1983 ஜுலையில் நடைபெற்ற இனவன்முறையைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார்கள்.
நான்கு மாணவிகள் உட்பட ஒன்பது மாணவர்கள் 1984ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட மாணவிகளுள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதணியும் ஒருவர்.
உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் விடுதலைப் புலிகளால் தமிழ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், அங்கு மதிவதனிக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் திருமணம் நடந்ததும் அனைவரும் அறிந்த விடயம்.
இதில் பெரிதாக வெளியே தெரியாத மற்றொருவிடயம் என்னவென்றால், அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதிவதனியுடன் தற்பொழுது தேர்தலில் த.தே.கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் சசிகலா ரவிராஜும் உண்ணாவிரம் இருந்தார் என்பதுதான்.
யாழ்பாணத்தில் த.தே.கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிடும் சசிகலாவுக்கு மாணவர்கள், பெண்கள் என்று ஆதரவு பெருகிவருகின்ற நிலையில், அவர் தனது மாணவப் பருவத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மூலம் மக்கள் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒருவர் என்று வெளியாகியுள்ள செய்தியானது, அவரது வெற்றிவாய்ப்பு அதிகரிக்க காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.