- ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி!
காலி – மஹாமோதரை ஆற்றில் இன்று (29) மூழ்கி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.நண்பர்களுடன் நீராட சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- யாழில் 33 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் – ஐந்து சந்திப்பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 33 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.36 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்.
- தாமரைப்பூ பறிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி காணாமல் போனார்
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை ஜெயந்தியாய குளத்தில் தாமரைப்பூ பறிக்க தோணியில் சென்ற தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று (29) பகல் இடம்பெற்றுள்ளது.திருப்பெருந்துறை 5ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையாவார்
- இலங்கை கிரிக்கெட்டின் புதிய உப தலைவராக தர்மதாச
இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவராக ஜயந்த தர்மதாச நியமிக்கப்பட்டுள்ளார்.இதுவரை உப தலைவராக இருந்த மதிவாணன் இராஜினாமா செய்ததை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
- யாழில் கணவனின் கத்தி குத்தில் மனைவி படுகாயம்!
குடும்பத் தகராறு காரணமாக பிரிவாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குத் தேடிச் சென்ற கணவர், சித்திரவதையின் பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- யாழில் “அவளுக்கு ஒரு வாக்கு” வீதி நாடகம்
“அவளுக்கு ஒரு வாக்கு” எனும் தொனிப் பொருளில் பெண் வேட்பாளர்களுக்கான வாக்கு சேகரிக்கும் பிரச்சார வீதி நாடகம் இன்று மருதனாமடம் சந்தையில் காலையிலும் யாழ்ப்பாணம் பஸ் தரிப்பு நிலையத்தில் மாலையிலும் இடம்பெற்றது. மன்னார் மகளிர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருமதி மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் இது நடைபெற்றது.
- தேர்தலுக்காக விசேட போக்குவரத்து திட்டம் – மஹிந்த அமரவீர
பாராளுமன்ற தேர்தலுக்காக எதிர்வரும் 10 நாட்களுக்கு விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்படவுள் ளது என போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்நிலையில், விசேட திட்டம் இம்மாதம் 31ஆம் திகதி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப் படவுள்ளது என்றார்.
- நல்லாட்சி வந்தால் சொத்துக்கள் மிஞ்சாது – பிரதமர்
நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி னால் தேசிய சொத்துக்கள் எவையும் மிஞ்சாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று புதன்கிழமை கொழும்பில் தொழிற்சங்கங் களுடன் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்ததாவது, தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னெடுத்த நடவடிக்கையையும் பிரதமர் பாராட்டினார்.
- வாக்களிப்பில் மக்கள் ஆர்வம் குறையும் –சரவணமுத்து
- ஆகஸட் ஐந்தாம் திகதி பொதுத்தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அனேகமானவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்வார்கள் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது,
களுத்துறை வடக்கு மஹஹீனடியங்கல பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த சட்ட விரோத மதுபானம் காய்ச்சி வடிக்கும் தொழிற்சாலை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
- வடக்கில் விசேட கவனம்
பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் இம் முறை விசேட கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலுக்கு சவாலாக அமையும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடக் கூடாது என அனைத்து கட்சி வேட்பாளர் களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. - ஜனநாயகத்தை மீட்பது கடினம்-ராஜித
ராஜபக்ஷகளின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் சென்றால் மீண்டும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது கடினமென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.