ஒவ்வொரு பௌர்ணமி தினங்களும் பௌத்தர்களுக்கு மிகமிக, முக்கியமான நாளாகும். அந்த நாளில், சகல விகாரைகளுக்கு செல்வதையே பெரும்பாலானோர் விரும்புவர்.
இந்நிலையில், பெளர்ணமி தினத்தில் அதாவது ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தேர்தல் பிரசார நடவடிக்கையை முன்னெடுக்க அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவுடன் அண்மையில் நடந்த கூட்டத் தில், கட்சி செயலாளர்கள் கொரோனா தொற்றின் காரண மாக தங்களது தேர்தல் நடவடிக்கைகளை உரிய முறை யில் மேற்கொள்ள முடியவில்லை என்று சுட்டிக்காட்டினர்.
இதன் காரணமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வீடு வீடாகச் சென்று அல்லது தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நிலைமையுடன் எதிர்நோக்கிய கட்டுப்பாடுகள் காரணமாக வீடு வீடாகச் சென்று வாக்குகளை இரந்து கேட்டல், துண்டுப்பிரசுரங் களை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் அடுத்த மாதம் 3 ஆம் திகதி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கு வது தொடர்பாகப் பரிசீலிப்பதற்கு இணக்கம் தெரிவிப் பதற்குத் தீர்மானிக்கப்பட்ட போதும், நடைமுறை சட்டத் தடங்கல்கள் காரணமாக, அதனைக் கைவிடத் தீர்மானித் துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு இதன் போது தெரி வித்துள்ளது.
இருப்பினும், ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவில் விளம்பர பிரச்சாரம் முடிவடைந்ததாலும், மேலும் பல பிரச்சினை கள் ஏற்படக்கூடும் என்பதால் இதற்கு அனுமதி வழங்க முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.