web log free
May 09, 2025

இலங்கையில் சமூகத்திற்குள் மீண்டும் கொரோனா

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும், அது தீவிரமாக பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா கொத்தனியில் நோயாளிகள் அடையாளம் காணப்படுவதில் சில சமூக பரவல் காணப்பட்டாலும் குறித்த நோயாளிகள் ஊடாக வைரஸ் சமூகத்திற்குள் பரவுவதனை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய பிரிவுகள் இணைந்து கொரோனா பரவுவதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பிரிவு, பாதுகாப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு நோயாளிகளுக்கு அருகில் செயற்பட்டவர்கள் தொடர்பில் செயற்படுவதாக சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் தொடர்பில் விசேட அறிக்கை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட லங்காபுர பிரதேச செயலகத்தில் சேவை செய்த நபர் இதற்கு முன்னர் கந்தகாடு நோயாளியின் குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலைமைக்கமைய அந்த செயலகத்தில் பணியாற்றியவர்கள் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய நேற்று இரவு 325 க்கும் அதிகமானோர் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

லங்காபுர பிரதேசத்திற்கு பயணத்தை தடை மேற்கொள்ளப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் கிடைக்கவுள்ள பீசீஆர் பரிசோதனை முடிவுகளுக்கமைய இந்த நிலைமை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd