இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், பாதுகாப்பு பிரதேசங்களுக்குள் வருமாறு கூறி ஆயிரக்கணக்கான பொது மக்களை படுகொலை செய்த போது அந்த மக்களையும் பாதுகாப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆலையடிவேம்பில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவரும் படையினரிடம் வெள்ளைக்கொடியுடன் சரணடையவில்லை என தற்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறுகின்றார்.
எனினும், வெள்ளைக்கொடியுடன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்ததாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா கூறியுள்ளதையும்” மாவை சேனாதிராஜா இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.