web log free
December 26, 2024

அப்பாவின் கனவு பலிக்காது- திகா

கொழும்பு வாழ் தமிழ்ர்கள்  மனோ கனேசனுக்கு வாக்களிக்க வேண்டாம்.  விமல் வீரவன்சவுக்கு வாக்களியுங்கள் என தேர்தல் பிரசாரம் செய்யும் தமிழர்கள், தமிழ் இனத்தின் துரோகிகளாக  கருதப்படுவார்கள். மலையக மக்கள் தொடர்பில் அப்பா  கனவு  கண்டார். என்று குறிப்பிடுகிறார்கள்.

குறுகிய  காலத்தில்   கனவுகளை  முடிந்தரை  நாங்கள் நிறைவேற்றினோம்.. மலையகத்தில்    நாங்கள்  செய்த சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க மக்கள் மீண்டும்  அதிகாரத்தை வழங்க வேண்டும். என  முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினரும்,  ஐக்கிய மக்கள் சக்தியின்     நுவரெயிலா மாவட்ட  வேட்பாளருமான  பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொழும்பு வாழ் மலையக இளைஞர்களுடனான  சந்திப்பில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில்,  இடம் பெறவுள்ள பொதுத்தேர்தல் மலையகத்துக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோலவே, கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கும் முக்கியமான தேர்தல் இந்நிலையில் கொழும்பு வாழ் தமிழர்கள் மனோ கணேசனுக்கு வாக்களிக்கக் கூடாதெனவும்  அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் கூறும் தமிழர்கள் தமிழினத்தின்    துரோகிகளாக கருதப்படுவார்கள்.

அப்பா கனவு கண்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் மலையகம் தொடர்பில் கனவு கண்டவர்கள் நாங்கள். நாம் கண்ட கனவே இன்று நிறைவேறியுள்ளது. .தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் சிறந்த தலைவர். பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவது அல்லது தோல்வியடைவது என்பது எனக்கு ஒரு பிரச்சினை இல்லை.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநித்துவம் அதிகரிக்க வேண்டும். இ.தொ.காவின் வேட்பாளர்கள்கூட வெற்றிபெற வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் நான் தோல்வியடைய வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.  நான் அமைச்சராக பதவி வகித்தக் காலத்தில் எனது உறவினர்கள் எவருக்கும் எனது அமைச்சில் தொழில் வழங்கவில்லை. எனது மகனுக்கான பெற்றோர் கூட்டங்களில் கூட  இதுவரையில் கலந்துகொண்டதில்லை.  மலையகத்தில் நான் இதுவரையில் செய்த சேவையை தொடரவே அதிகாரத்தைக் கேட்கிறேன்.    என்றார்.

 

Last modified on Monday, 10 August 2020 03:10
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd