web log free
December 26, 2024

மாட்டிறைச்சி கடத்தியவரின் மண்டையை பிளந்த பயங்கரம்

மாட்டிறைச்சி கடத்தியதாக நினைத்து அப்பாவி ஒருவரை கடத்தி கொடூரமாக தாக்கி அவரது மண்டையை பிளந்துள்ளது ஒரு கும்பல்.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சி, பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது..

இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.. குறிப்பாக மாட்டிறைச்சி தடை குறித்த அறிவிப்புக்கு பிறகு, பசு பாதுகாப்பு அமைப்பினரால் தாக்குதல்கள் அதிகரித்து, கொலைகளும் நடைபெற்று வருகின்றன.

மாட்டிறைச்சி கடைகளுக்கும், மார்கெட்டுகளுக்கும் கொண்டு போய் விற்கவும் முடியாத அளவுக்கு பீதி, கலக்கம் நிலவுகின்றன.. பெரும்பாலும் வடமாநிலங்களில்தான் இக்கொடுமைகளின் அக்கிரமங்கள் நடக்கின்றன.

டெல்லி அருகே குர்கானில் நேற்றுகூட ஒரு சம்பவம் நடந்தது.. இந்த குர்கான் பகுதியில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் நிறைய உள்ளன.. நேற்று காலை 9 மணி இருக்கும், இந்த பகுதியில் மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது இதை பார்த்த பசு பாதுகாவலர்கள் கும்பல் ஒன்று 8 கிமீ தூரத்திற்கு அந்த வேனை துரத்தி சென்று பிடித்துள்ளது. ஒருவேளை அந்த வேனில் மாட்டிறைச்சியை கடத்தி செல்கிறார்களோ என்று சந்தேகப்பட்டு அவர்களை விரட்டி பிடித்தது. பிறகு வேனின் உள்ளே இருந்த டிரைவரை வெளியே இழுத்து கொடூரமாக அந்த கும்பல் தாக்கியுள்ளது.

அவர் டிரைவர் பெயர் லுக்மேன்.. மண்ணில் புரண்டு விழுந்தவரை மொத்த கும்பலும் சேர்ந்து தாக்கியதில் அவரது மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது.. இப்படித்தான், கடந்த 2015ல் நொய்டாவின் தாத்ரியில் மாட்டிறைச்சி கடத்தி சென்றதாக நினைத்து ஒருவரை கும்பல் அடித்து கொன்றேவிட்டது.. அதுபோலவேதான் லுக்மேன் மீதும் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சரமாரி தாக்கியும் லுக்மனை விடவில்லை அந்த கும்பல்.. மூட்டையாக கட்டி, குர்கானின் பாட்ஷாபூர் கிராமத்திற்கு கடத்தி சென்று, அங்கு வைத்தும் தாக்கியது... இதையடுத்து தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தி, உயிருக்கு போராடிய லுக்மேனை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை தரப்பட்டு வந்தாலும், நிலைமை சீரியஸாக உள்ளதாம்.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. ஆனால், இதுவரை அந்த கும்பலில் யாருமே கைது செய்யப்படவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், ஒருவர் கைதாகி உள்ளதாக கூறப்படுகிறது.

உண்மையில், சதர் பஜார் மார்க்கெட்டில் இறைச்சியை வழங்கவே லுக்மேன் குருகிராமிற்கு வந்திருக்கிறார்.. ​ ஒரு வருடமாகவே அந்த மார்கெட்டுக்கு லுக்மேன்தான் இறைச்சி சப்ளை செய்கிறாராம்.. இந்த தாக்குதல் சம்பந்தமாக பாட்ஷாப்பூர் ஸ்டேஷனில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்.. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd