கலேவெல - பத்கொலகொல்ல பகுதியில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றின் அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. எட்டு வயதான சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சிறுவனை காணாத உறவினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, அந்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றின் அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் கலேவெல வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவன் வசிக்கும் வீட்டின் முன் உள்ள கால்வாய் போதைப்பொருள் பாவனையாளர்களின் புகலிடமாக மாறியுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஹெரோயின் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் குப்பைகள் சிறுவன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்திற்கு அருகில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்ட நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெற்றுள்ளன.
உயிரிழந்த சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கலேவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டறிய கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.