கொழும்பு – வெலிகடை சிறைச்சாலைக்கு அருகே சிறை சாலை அதிகாரிகளால் பூனையொன்று பிடிக்கப்பட்டு ள்ளதாக சிங்கள ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வெலிகடை சிறைச்சாலையின் முன்னால் உலாவிக்கொண்டிருந்த பூனையொன்றைச் சிறைச் சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்து சோத னைக்கு உட்படுத்திய குறித்த விடயம் வெளியாகி யுள்ளது.
அத்துடன் பூனையின் கழுத்தில் 1கிராம் 7 மில்லியன் கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள் மற்றும் மெமரி அட்டை ஆகியன கட்டி தொங்கவிடப்பட்ட நிலை யிலேயே குறித்த பூனையைச் சிறைச்சாலை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமையக் குறித்த பூனை பிடிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த பூனையை பொரள்ளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகச் சிறைச்சாலை ஆணைக்குழு சந்தன ஹேகநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.