ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, முன்னாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். கட்சியின் பிரதித் தலைவர் தெரிவை, சில நாட்களுக்கு பிற்போடுமாறும் அந்த கடிதத்தின் ஊடாக கோரியுள்ளார். மூன்றாவது தரப்பின் ஊடாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த, அதற்கு ஆதரவளித்திருந்த ஏனைய உறுப்பினர்கள் அடங்களாக 150க்கும் மேற்பட்டோர், ஐ.தே.கவிலிருந்து விலக்கப்பட்டனர். எனினும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.கவின் உப-தலைவருமான சஜித் பிரேமதாஸ, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.