பாராளுமன்றத்தின் புதியக் கூட்டத்தொடர், ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதியன்று கூடவுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
புதிய பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு, நாடளாவிய ரீதியில், நாளை (05) காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரையிலும் நடைபெறும்.
அதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகிவிட்டன. வாக்குப்பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று (04) காலை 8 மணிமுதல் ஆரம்பமாகியது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.