கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்பட்ட பூனை தொடர்ந்தும் சிறைச்சாலை வளாகத்துக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூனை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து பிடிக்கப்பட்டது.
இதன்போது பூனையின் கழுத்தில் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் 1 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள், தொலைபேசிக்கான சிம் அட்டைகள் என்பன மீட்கப்பட்டன.
இந்தப்பூனையை பயன்படுத்தி சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கடத்தும் முயற்சியே இதுவென அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து குறித்த பூனை சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. எனினும் அது அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக நேற்று செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையிலேயே குறித்த பூனை தொடர்ந்தும் சிறைச்சாலை வளாகத்துக்குள் சுதந்திரமாக சுற்றி திரிவதாக சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.