சர்வதேச கராட்டி வீரரான வசந்த சொய்ஸா கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான, எஸ்.எப். லொக்கா அழைக்கப்படும் இரான் ரணசிங்க துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
எஸ்எப்.லொக்கா இன்று காலை காரொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது, அநுராதபுரம்- தஹயாகம சந்திக்கு அருகில் வைத்து, அடையாளம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக அநுராதபுரம் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.