web log free
December 26, 2024

லெபனானில் இரு இலங்கையர் காயம்

லெபனானின் தலைநகரத்தில் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் நேற்று (4) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர்கள் இருவர் காயமடைந்துள்ளனரென, லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகம் ​அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன் இலங்கைத் தூதரகமும் சிறிதளவு ​சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.​ 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd