தாம் புள்ளடியிட்ட வாக்குச்சீட்டை, அலைபேசியில் புகைப்படம் எடுத்த இளைஞரொருவர், இன்று (5) நாவலப்பிட்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி- இம்புல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி மத்திய மஹா வித்தியாலய வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களித்த இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளாரென்றும் இவர், றம்பொடை- எல்பொட சுற்றுலா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளாரென்றும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.