கொரோனா தொற்றால் வாக்களிக்கச் செல்ல அச்சம் கொண்டுள்ள வாக்காளர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக, அவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கு, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர், மஹிந்த தேசப்பிரிய இன்று வாக்களிப்பில் கலந்துகொண்டார்.
மஹிந்த தேசப்பிரிய பம்பலப்பிட்டி- லிண்டிசே மகளிர் கல்லூரிக்கு இன்று காலை சென்று, வாக்களித்துள்ளார்.
தான் ஒரு வாக்காளராக 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று வாக்களித்துள்ளாகத் தெரிவித்துள்ள அவர், அச்சமின்றி அனைவரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ள செய்வதற்காகவே, தான் இன்று வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.