முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தன்னுடைய புதிய பயணத்தை நாளை (06) முதல் ஆரம்பிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ், மாத்தறை மாவட்டத்தில் அவர் போட்டியிட்டார்.
எனினும், தான் தேர்தலில் வாபஸ் பெற்று விட்டதாகவும், விருப்பு வாக்குகளை தனக்கு அளிக்க வேண்டாம் என்றும் இறுதி நேரத்தில் தெரிவித்து, வாபஸ் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.