பாணந்துறை, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க சென்றிருந்தவர்களில் ஆணொருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.
பெக்கேகம மகா வித்தியாலயத்துக்குவாக்களிக்க வருகை தந்திருந்த 80 வயதான ஒருவர் திடீரென அவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மினுவாங்கொட - அலுத்தேபொல, வலகம்பா மஹா வித்தியாலயத்தில் வாக்குச்சாவடிக்கு, வாக்களிப்பதற்கு வருகைதந்த 69 வயதான சீலவதி, சாவடிக்குள் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில், வத்தளை, அத்தனகல பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில், கடமையிலிருந்த நிலையத்துக்கு பொறுப்பான அதிகாரிகளில் இருவர், மயங்கி விழுந்துவிட்டனர்.
அவ்விருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த வாக்களிப்பு நிலையத்தின் ஏனைய செயற்பாடுகளை, கனிஷ்ட அதிகாரிகள் முன்னெடுத்தனர்.