தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சுகாதார விதிகளை மீறி, பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் தலைவர் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை இன்னும் முடிக்காத நிலையில் , அவரும் அவரது குடும்பத்தினரும் வாக்கு சாவடிக்கு வருகை தந்து வாக்களித்ததாகவும், சுகாதார அதிகாரிகள் மறுத்த போதிலும் அவர்கள் அதனை மீறி வாக்களித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் வாக்களித்ததாக தகவல் கிடைத்ததும், காவல்துறை மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் அவர்களை புனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பியுள்ளனர்.
லங்காபுர பிரதேசத்தில் ஏற்கனவே கொரோனா அச்சம் காரணமாக லங்காபுர பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் ஒரு பிராந்திய அரசு வங்கி மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.