பொதுத் தேர்தலுக்கான முதலாவது பெறுபேறு, 2.30க்கு வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், பெறுபேற்றை, பிற்பகல் 1.30க்கு வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
மாத்தறை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களின் பெறுபேறுகளே முதலில் வெளியாகும்.
காலி மாவட்டத்தின் பெறுபேற்றை முதலாவதாக வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எனினும், சீரற்ற காலநிலையால், பெறுபேறு தாமதமாகும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நுவரெலியா, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பெறுபேறுகள், திட்டமிட்ட நேரத்தில் வெளியிடப்படும்.
யாழ்ப்பாணத்தில் நல்லூர் தொகுதிக்கான தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள், காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, நிறைவடைந்துவிட்டன என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.