தற்போது வெளியாகி கொண்டிருக்கும் தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம், ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியை கண்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றி பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைத்துள்ள ரணில் விக்கிரமசிங்க, முக்கிய மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்நிலையில், ஸ்ரீ கொத்தாவை கைப்பற்றுவதற்கு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதால், அங்கு சற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரையில் வெளியான பெறுபேறுகளின் பிரகாரம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னணியில் இருக்கிறது.
ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாம் இடத்தில், தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது. நான்காவது இடத்தில், ஐக்கிய தேசியக் கட்சி இருக்கிறது.