எங்கள் மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரரின் 16 வருட அரசியல் வாழ்க்கை முற்றுப் பெறுகிறது.
எங்கள் மக்கள் சக்திக் கட்சியின் வேட்பாளராக கம்பஹா மாவட்டத்திலிருந்து களம் குதித்துத் தேர்தலில் தோற்றதனாலேயே அவரது பாராளுமன்ற வாழ்க்கை நிறைவுறுகிறது.
2004 ஆம் ஆண்டு தேர்தலில் ஜாத்திக ஹெல உறுமயவைப் பிரதிநிதித்துவப்படுத்தி களுத்துறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான தேரர் அவர்கள்இ 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்திலிருந்து போட்டியிட்டு வெற்றியீட்டினார்.
2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகப் பாராளுமன்றிற்குத் தெரிவானார். பௌத்த மதகுரு ஒருவர் நீண்ட காலமாக பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தார்.