கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட சவாலுக்கு மத்தியில் மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடித்தமைக்கு இலங்கைக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.
புதிய நாடாளுமன்றம் கூடுவதுடன், அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு செயல்திறன்மிக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கட்டியெழுப்பவும், நாட்டின் இறையாண்மையைக் காக்கவும் புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என, எதிர்பார்ப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகk் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.