ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனக்கான 17 தேசியப் பட்டியலின் பெயர்களையும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
அந்த பட்டியலில், சிறுபான்மையின சார்பில், முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், சட்டத்தரணி அலி சப்ரி, முன்னாள் எம்.பி. மொஹமட் முஸம்மில், மொஹமட் பலீல் மர்ஜான் ஆகியோருடைய பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.