ஐக்கிய தேசியக் கட்சி தற்போது முகங்கொடுத்திருக்கும் நிலைமையின் கீழ், கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவிடம் கோரிக்கை விடுப்பதற்கு கட்சியின் முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளார்.
அவரை தனியாக சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கட்சியில் ஒரு பிரிவினர், கருவின் வீட்டுக்குச் செல்லவுள்ளனர் என அறியமுடிகின்றது.
இதேவேளை, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.