web log free
May 10, 2025

இவர்தான் புதிய சபாநாயகர்

 

எதிர்வரும் 20ஆம் திகதியன்று கூடவிருக்கும் புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகரான முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறை மாவட்டத்திலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவான அவர், பழபெரும் அரசியல்வாதி ஆவார்.

1977 ஹினிதும ​தொகுதியின் ஊடாக பாராளுமன்றத்துக்கு முதன்முறையாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக தெரிவு செய்யப்பட்டார். எனினும், 1987 ஆம் ஆண்டு இந்து- லங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, அக்கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து​கொண்டார்.

அதன்பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வரைக்கும் அரசியலில் வெற்றிப் பெற்ற அவர், ஒவ்வொரு தேர்தல்களிலும் வெற்றியீட்டி, அமைச்சுப் பொறுப்புகள் பலவற்றையும் வகித்தார். அத்துடன், தென்மாகாண சபையின் முதலமைச்சராகவும் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd