12ஆம் திகதியன்று பொறுப்பேற்கவுள்ள புதிய அமைச்சரவைக்கான பட்டியலை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்றையதினம் 26 பேர் மட்டுமே, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர் மற்றும் வேலைத்திட்ட அமைச்சர்கள் இம்முறை பதவியேற்க உள்ளனர்.
அந்தப் பதவிகள், காலதாமதித்தே வழங்கப்படவுள்ளன. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் விபரங்கள்
1. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ- புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சு.
2. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர்
3. சமல் ராஜபக்ஷ – நீர்பாசனம்
4. நாமல் ராஜபக்ஷ- விளையாட்டுதுறை
5. ஜி.எல்.பீரிஸ்- கல்வியமைச்சர்
6. தினேஸ் குணவர்தன- வெளிநாட்டலுவல்கள்
7. பவித்திரா வன்னியாரச்சி- சுகாதாரம்
8. மஹிந்தானந்த அளுத்கமகே- விவசாயம்
9. பிரசன்ன ரணதுங்க- சுற்றுலா மற்றும் விமான சேவைகள்
10. கெஹலிய ரம்புக்வெல- ஊடகத்துறை
11. அலி சப்ரி- நீதித்துறை