பொலன்னறுவை, அரலகங்வில போகஸ் சந்தியில் பிரதேசத்தில் கெப்ரக வாகனமொன்று, வீதியோரத்தில் பயணித்து கொண்டிருந்த 11 மாணவர்கள் மீது கண்மூடிதனமான மோதியுள்ளது.
அதில், மாணவி ஒருவர் துடிதுடித்து பலியானார். மாணவர்கள் 10 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.
அங்கு நடைபெற்ற தனியார் வகுப்பொன்றில் கலந்துகொண்டுவிட்டு, வீடுகளை நோக்கி திரும்பி கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து கெப் ரக வானத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகத் தெரிவித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.