web log free
April 07, 2026

விபத்தில் நால்வர் காயம்

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை புனித பெட்றிக்ஸ் தேவாலயத்திற்கு முன்னால் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பயணித்த எட்டு பேரில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு கிரிபத்கொடை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சிவனொளிபாதமலை யாத்திரையை மேற்கொண்டு விட்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd