ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான விசேட கலந்துரையாடல் இன்று (12) இடம்பெறவுள்ளது.
இதற்காக தற்போதுவரையில் 8 பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, பொருளாளர் தயா கமகே, மற்றும் ருவான் விஜேவர்தன, அர்ஜுன் ரணதுங்க, பாலித்த ரங்கே பண்டார, வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன.