இன்றையதினம் புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்கள் பலர், அமைச்சு பதவிகள் தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து விசனம் தெரிவித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களுக்கு மிகவும் நெருங்கியவர்களிடம் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
அமைச்சரவை பட்டியல் தயாரிப்பதற்கு முன்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமான நபர்களுக்கு, இந்த அமைச்சுப் பதவிதான் தங்களுக்கு வழங்கப்படவேண்டும் என காதுக்குள் போட்டுவைத்துள்ளனர்.
எனினும், அதற்கு செவிசாய்க்காமல் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என, நெருக்கமானவர்களிடம் அமைச்சர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அவ்வாறானவர்கள் அமைச்சுகள் கிடைத்திருந்தும். அமைச்சுப்பொறுப்புகள் கிடைக்காத முன்னாள் அமைச்சர்களிடமும் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.