முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்றையதினம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியோ, இராஜாங்க அமைச்சுப் பதவியோ இன்றேல், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பதவியோ ஏன் கிடைக்கவில்லை என்பது தொடர்பில் தகவல்கள் கசிந்துள்ளன.
முன்னைய கலந்துரையாடல்களின் போது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியொன்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் இரண்டும் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மஹிந்த அமரவீரவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவியும் தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க ஆகிய இருவருக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் இரண்டு வழங்கப்பட்டுள்ளன.
தனக்கு கிடைக்கவேண்டிய சுற்றாடல்துறை அமைச்சுப் பதவியையே, மஹிந்த அமரவீரவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விட்டுக்கொடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.