ஐக்கிய தேசியக் கட்சியினரை சந்தித்து பேச்சு நடத்த எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடுகிறது. அதன் பின்னர் இந்த சந்திப்பினை நடத்த உத்தேசித்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின தேசிய அமைப்பாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எனினும் இந்த சந்திப்பினை நடத்துவதற்குத் தேவையான சூழலை ஐக்கிய தேசியக் கட்சியினர் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். கட்சிக்குள் காணப்படும் நெருக்கடியை நிவர்த்தி செய்ததன் பின்னர் சந்திப்பை நடத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.